">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்த அவமானம் டிரம்புக்கு தேவையா? – பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியேறிய மக்கள் (வீடியோ)
குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளையாட்டு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த போதே கொத்தாக பொதுமக்கள் வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.2
அமெரிக்காவின் ஜனாதிபாதி ஆன பின்பு முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். தனது மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருகன் மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் தனி விமானத்தில் வந்துள்ளார். காலையில் டெல்லியில் சில இடங்களை சுற்றிப்பார்த்த அவர் அதன்பின் குஜராஜ் சென்றார்.
அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்திற்கு சென்று ‘நமஸ்தே டிரம்ப்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார். ஆனால், டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்த போதே பொதுமக்கள் பலரும் அவரை அவமதிப்பது போல் அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பான வீடியோவை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
டிரம்ப் – மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து வெளியேறிய மக்கள் #NamasteTrump #TrumpIndiaVisit#TrumpInIndia #TrumpVisitIndiapic.twitter.com/8p0c5EaZTX
— ₮ĦɆ €ØⲘⲘØ₦ Ⲙ₳₦ (@Commonman_Twitz) February 24, 2020