ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்த ஒருவர் தனியார் மருத்துவரின் தவறான சிகிச்சையால் காலை இழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே தனிமையில் ராஜேஷ்வரனின் தனிமையில் சந்தித்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இங்கு ஒழுங்காக சிகிச்சை அளிக்கமாட்டார்கள். இங்கு வேலைபார்க்கும் மருத்துவரே தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் போய் சேர்ந்தால் குறைந்த செலவில் நல்ல சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அதைக்கேட்டு அவர்களும் அங்கே செல்ல, மருத்துவர் பெரோஸ் கான் அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து, மருத்துவச் செலவு என சிறிக சிறிக 4 லட்சம் ரூபாய் வரை பணம் கறந்துள்ளனர். ஆனாலும் ஆறு மாத காலமாக அவரது காலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கட்டைப் பிரித்து பார்த்தபோது காலில் சீழ் பிடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் மீண்டும் அரசு மருத்துவமனையிலேயே சேர்த்துள்ளனர்.
அங்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே இப்படி ஆனது என சொல்ல எப்படியாவது காலை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமா என மருத்துவர்கள் முயன்றுள்ளனர். இது சம்மந்தமாக மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளனர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…