">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லையா ? – தந்தையின் கண்டிப்பால் விஷம் குடித்த பெண் !
நீலகிரி மாவட்டத்தில் தனது தோழியின் தந்தை இறந்த நிலையில் அவரது வீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பிரியா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தனது தோழியின் தந்தை இறந்த நிலையில் அவரது வீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பிரியா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் சுந்தர் ராஜ் என்பவரின் மகள் பிரியா. துபாயில் வேலை பார்த்துவந்த இவர் இப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பிரியாவின் நெருங்கிய தோழி ஒருவரின் தந்தை சென்னையில் இறந்துவிடவே அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள சென்னை செல்ல வேண்டுமென பிரியா தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவரைத் தனியாக அனுப்ப முடியாது என பிரியாவின் தந்தை கண்டிப்பாய் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடையவே உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊரார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.