">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இத்தனை மதுபாட்டில்களா… ரோலர் விட்டு ஏற்றிய போலீஸார்- மதுப்பிரியர்கள் பார்க்காதீர்கள்!
ஆந்திர மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் ரோலர் ஏற்றி ஆந்திர போலிஸார் அழித்துள்ளனர்.
ஆந்திர மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் ரோலர் ஏற்றி ஆந்திர போலிஸார் அழித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக முழு ஊரடங்கு பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அந்த இரண்டு மாதமும் மது குடிக்க முடியாமல் குடி அடிமைகள் துடிதுடித்து போனர். ஆனாலும் அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி பல இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தது. அதே போல பல இடங்களில் போலி சரக்குகளும், கள்ளத்தனமாக மது கடத்தலும் நடந்தது. அவ்வாறு கடத்தப்பட்ட மதுபாட்டில்களை 300 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆந்திர மாநில போலிஸார் கைப்பற்றினர் . அவை மொத்தமாக 14,000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் ஆகும். இவற்றின் மதிப்பு 72 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.
இந்நிலையில் அவற்றை எல்லாம் அழிக்கும் பணியில் கிருஷ்ணா மாவட்ட போலிஸார் ஈடுபட்டனர். அதற்காக பாட்டில்களை வரிசையாக அடுக்கி ரோலரை ஏற்றி அழித்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.