திரௌபதி படத்தை தியேட்டர்களில் ரிலிஸ் செய்யாதீர்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேண்டுகோள் !

விரைவில் வெளியாக உள்ள திரௌபதி படத்தினை ஆம்பூரில் உள்ள திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என அப்பகுதி வி சி கவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் திரௌபதி என்ற படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதற்குக் காரணம் அந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள நாடகக் காதல் எனும் அம்சம். இது சம்மந்தமாக அந்த படம் சாதி வெறியைத் தூண்டுவதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்க, குறிப்பிட்ட இடைநிலை சாதிகள் அந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை ஆம்பூரில் உள்ள 13 தியேட்டர்களில் ரிலிஸ் செய்ய வேண்டாம் ஆம்பூர் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்களிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Published by
adminram