More

மூடிட்டு போடா? – கலாய்த்த ரசிகருக்கு ரித்விகா கொடுத்த பதிலடி

பொதுவாக சமூக வலைத்தளங்களில் நடிகைகள் தங்களின் புகைப்படங்களை பதிவிடும் போது ரசிகர்களில் சிலர் எதிர்மறையான கருத்துகளை கூறி கிண்டலடிப்பதுண்டு. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இப்படி போட்டோ போடுறியா? என நேரடியாகவே கலாய்ப்பார்கள். சில நடிகைகள் அதை கண்டு கொள்ளாமல் கடந்து போய்விடுவார்கள்.  ஆனால், சிலர் கோபமடைந்து ரசிகர்களுடன் மல்லுக்கட்டு சண்டை போடுவார்கள்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ரித்விகா இணைந்துள்ளார். மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமான அவர் அதன்பின் கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோப்பையையும் வென்றார்.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதற்கு ‘ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாம வெட்டியா இருக்காங்க’ என கிண்டலடித்திருந்தார். அதற்கு ‘மூடிட்டு போடா’ என ரித்விகா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram