திரவுபதி படம் குறித்து வாயைத் திறக்காதே: அஜித் போட்ட கண்டிஷன்

50e6eee5bde319c60041f05e72b19a51

திரவுபதி படம் குறித்து எந்த பேட்டியும் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த படம் குறித்து எந்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தனது மச்சானுக்கு அஜித் அறிவுரை கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சமீபத்தில் வெளியான திரவுபதி படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தில் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் தற்போது அரசியல்வாதிகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அஜித் தரப்பில் இருந்து ரிச்சர்ட்ஸ்க்கு ஒரு அறிவுரை கூறபட்டிருப்பதாகவும் அதன்படி இந்த படம் குறித்து எந்தவிதமான பேட்டியும் கொடுக்க வேண்டாம் என்று கருத்தும் சொல்ல வேண்டாம் என்றும் அஜித் அறிவுரை கூறி இருப்பதாக கூறப்படுகிறது

அப்படியே ஒருவேளை பத்திரிகையாளர்கள் யாராவது இந்த படம் குறித்து கேள்வி கேட்டால் இந்த படத்தினை இயக்குனர் கூறியபடி நான் நடித்தேன் என்ற ஒரே வார்த்தையை மட்டும் கூறிவிட்டு முடித்துக் கொள்ளும்படி அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Related Articles
Next Story
Share it