எனவே, இதன்மூலம் கொரொனா தொற்று பரிசோதனைகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை தமிழகம் வாங்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் அங்கு பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதோடு, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் இதே புகாரை தெரிவித்தது.
இந்நிலையில், இன்னும் 2 நாட்கள் ரேபிட் கருவிகளை பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அறிவித்துள்ளது. ரேபிட் கருவியின் தரத்தை நிபுணர்கள் பரிசோதித்து கூறியபின் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக பல்வேறு நாடுகளும் புகார் கூற துவங்கியுள்ளன. ரேபிட் கருவிகள் தற்போது சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வாங்கப்படுகிறது. இதில், சீனாவிலிருந்து வாங்கிய கருவிகளே சரியாக முடிவுகளை காட்டவில்லை என பல நாடுகளும் புகார் கூற துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பல்வேறு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…