டான் படத்தை காப்பி அடிச்சிட்டு இவ்வளவு அலப்பறையா?!.. டிராகனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!..

by சிவா |
டான் படத்தை காப்பி அடிச்சிட்டு இவ்வளவு அலப்பறையா?!.. டிராகனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!..
X

Dragaon Trailer: குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார். ஒரு கதையை உருவாக்கி ஹீரோக்களை தேடி அலைந்தார். யாரும் பிடி கொடுக்கவில்லை. ஏனெனில், பிரதீப்புக்கு சினிமாவில் படம் இயக்கிய அனுபவம் இல்லை. ஜெயம் ரவியிடம் கதை சொன்னார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் ஒரு காட்சியை எடுத்து காட்ட சொன்னார். அப்படி ஒரு காட்சியை பிரதீப் எடுத்து காட்ட ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார்.

கோமாளி: அப்படி வெளியான கோமாளி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் லவ் டுடே என்கிற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் இன்றைய 2K கிட்ஸ்களின் காதல் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியிருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்தது.

அதன்பின் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்திலும் நடிக்க துவங்கினார். இதில், டிராகன் பட வேலைகள் முடிந்துவிட்டது. இந்த படம் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது.

டிராகன் டிரெய்லர்: இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அதில் வரும் பல காட்சிகள் சிவகார்த்திகேயனின் டான் பட காட்சிகளை நினைவுப்படுத்துகிறது. டான் படத்தில் சிவகார்த்திகேயனை போலவே கல்லூரியில் அலப்பறை செய்யும் வேடம் பிரதீப்புக்கு. அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா பேராசிரியராக வருவார். இந்த படத்தில் மிஷ்கின் வருகிறார். அதேபோல ஸ்ட்ரிக்ட் ஆபிசர் வேடம்.

டான் பட காப்பி: அந்த படத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என ஆசைப்படுவார் எஸ்.கே. இந்த படத்திலும் அது போல காட்சிகள் வருகிறது. எனவே, டிராகன் டான் படத்தை போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். டிரெய்லர் பார்க்க டான் படம் போல இருந்தாலும் இதில் கதை வேறாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

அதேபோல், பிரதீப்பின் நடிப்பு தனுஷை ஞாபகப்படுத்துகிறது. ஏற்கனவே இவரை குட்டி தனுஷ் என்று சிலர் அழைத்து வருகிறார்கள். எந்த நடிகரையும் நினைவு படுத்தாமல் நடித்தால் மட்டுமே பிரதீப் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும் என பலரும் பேச துவங்கிவிட்டனர்.

Next Story