இழுத்து மூடப்பட்ட கூகுள் நிறுவனம்:பாதிக்கும் தகவல் தொடர்பு – மக்கள் அவதி !

கொரோனா வைரஸ் தாக்குதலால் பீதியில் இருக்கும் சீனாவில் தனது அலுவலகங்களை கூகுள் நிறுவனம் மூடியுள்ளது.

சீனாவின் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். = தாக்கியுள்ள பலி எண்ணிக்கை வரை 140ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீனா முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. சீனாவில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள் கடுமையான சோதனைக்குப் பின்னே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையொட்டி சீனாவில் புத்தாண்டுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை.  சீனாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது கூகுள் நிறுவனம் தங்கள் கிளைகளை சீனாவில் மூடியுள்ளது. இதனால் சீனாவில் தகவல் தொடர்பு பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது

Published by
adminram