வலைப்பேச்சாளர்களுக்கு வச்சாரே ஆப்பு.. ‘டிராகன்’ பட இயக்குனர் கொடுத்த பதிலடி

by ராம் சுதன் |

உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ் ;டிராகன் படத்தை எடுக்கிற ஏஜிஎஸ் நிறுவனம் ரொம்ப ஸ்மார்ட்டா ஒரு படத்தை எடுத்து பெரிய அளவில் அவர்களுக்கு ஒரு லாபம் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவெனில் டிராகன் படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது .அதாவது 14 கோடி அளவில் இதனுடைய டிஜிட்டல் உரிமையை விற்று இருப்பதாக தெரிகிறது.

பெரிய லாபம்: அதன் பிறகு சாட்டிலைட் உரிமை ஆறு கோடிக்கும் ஆடியோ உரிமை ஆறு கோடிக்கும் விற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 26 கோடி. இந்த மூன்று உரிமைகளிலேயே ஏஜிஎஸ் கம்பெனிக்கு டேபிள் பிராஃபிடே கிடைத்துவிட்டது. இதற்குப் பிறகு தியேட்டரிக்கலிலிருந்து வருவது எல்லாமே அந்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கிடைக்கிற பெரிய லாபம் என்று வலைப்பேச்சில் பிஸ்மி கூறினார்.

மொத்த பட்ஜெட்: ஆனால் டிராகன் படத்தின் இயக்குனர் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 37 கோடி ரூபாய் என்று அவரே சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் பேசுவது எல்லாமே பொய். அப்படியே உண்மை மாதிரியே பேசுவாங்க. இப்படி எல்லாம் பொய் பேசி தான் சோறு சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் இவர்களைப் பற்றி பல வகைகளில் விமர்சித்து வருகிறார்கள்.

பொழுது போக்கு திரைப்படம்: டிராகன் படத்தை பொருத்தவரைக்கும் இந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் சார்ஜ், வி ஜே சித்து என முக்கிய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி youtubeல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த படம் 21ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி 35 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. பிரதிப் ரங்கநாதன் திரைப்படம் என்றாலே பொழுதுபோக்கு திரைப்படமாகத்தான் இருக்கும். இதில் அஸ்வத் மாரிமுத்து கூட்டணி எனும் போது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகத் தான் தயாராகி இருக்கிறது என கூறுகிறார்கள்.

Next Story