திரௌபதி படத்தின் இயக்குனரான மோகன் பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு பதிவை நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு ரிலிஸான படங்களில் அதிக அளவு லாபம் கொடுத்த படமாக மோகன் இயக்கிய திரௌபதி படம் அமைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக அந்த படம் கண்டனங்களைப் பெற்றது. ஏனென்றால் படத்தில் ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் காதல்களை ஒட்டுமொத்தமாக நாடகக் காதல் எனப் பொதுமைப்படுத்தி காட்டி இருந்தது அந்த திரைப்படம்.
அதனால் சமூகவலைதளங்களில் மோகன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அக்னி கலசம் (ஒரு குறிப்பிட்ட சாதியின் சின்னமாக பின்பற்ற பட்டு வருகிறது) பொறிக்கப்பட்ட புடவைகள் விற்பனைக்குக் கிடைக்கும் என சொல்லி தொடர்பு எண்களைப் பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் லாக்டவுன் சமயத்தில் வேலை எதுவும் இல்லாத புடவை விற்க ஆரம்பித்து விட்டீர்களா என அவரை கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…