உடல்தகுதி தேர்வுகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள என்சிஏவை புறக்கணித்ததால் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை திருப்பி அனுப்பினார் ராகுல் டிராவிட்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நல்ல உடல் தகுதி பெற்றுள்ளார. இந்நிலையில் அவர் தனது உடல் தகுதியை பிசிசிஐக்கு நிரூபிக்க, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை அணுகினார். ஆனால் பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர்கள் அனைவரும் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள என் சி ஏவில் தான் தங்கள் உடற்தகுதி சோதனைகளை நடத்த வேண்டும்.
இதற்காக என் சி ஏ வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட்டும் மருத்துவரும் கடந்த வாரம் காத்திருந்தனர். ஆனால் அங்கு சோதனைகளை செய்ய பூம்ரா முன்வராததால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பும்ராவுக்கு உடற்தகுதி தேர்வு நடத்த டிராவிட் மறுத்துள்ளார். இதுசம்பந்தமாக பிசிசிஐ சவுரவ் கங்குலிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த கங்குலி, இந்திய வீரர்கள் அனைவரும் என் சி ஏ மூலமாகவே உடற்தகுதி சான்றிதழ் பெற்று இந்திய அணியில் விளையாட முடியும் என கூறியுள்ளார்.
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…