வேளச்சேரியில் ஏடிஎம்-ல் பணம் செலுத்த சென்ற வண்டியை திருடிச் சென்ற ஓட்டுனர் திருவாரூரில் உள்ள மாமியார் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்காக பணம் உள்ள வேன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வேனின் ஓட்டுனரான அம்புரோஸ் 52 லட்ச ரூபாய் பணத்தோடு தலைமறைவானார்.
இந்நிலையில் அவர் திருவாரூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அதிகளவில் பணத்தை பார்த்தப்போது ஆசை வந்ததால் அதனை திருடினேன். வேனில் பாதுகாப்புக்காக அனுப்பப்படும் காவலர்கள் அனுப்பப்படவில்லை எனத் தெரிகிறது.
சம்பளத்தைக் குறைப்பதற்காக வங்கி நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு எடுக்காமல் இதுபோல தனியாக நபர்களை அனுப்புவது குற்றத்திற்கு காரணமாக அமைகிறது என சொல்லப்படுகிறது. அம்புரோஸிடம் இருந்து 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…