போதைப்பொருள் வழக்கு: துருவித் துருவி கேள்விகேட்டு அமலாக்கத்துறை.. சிக்கிய நடிகை!
சினிமா நடிகர்களுக்கும் போதைப்பொருளுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம்போல, அடிக்கடி போதைப்பொருள் வழக்கில் சிக்கிக்கொள்வது வழக்கமாகி வருகின்றது. எதெற்கெடுத்தாலும் பார்ட்டி என குடியும் கும்மாளமுமாக அழைகின்றனர் பலர். இதில் சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு.
இப்படித்தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் போதைப்பொருள் வழக்கில் 12 சினிமா பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர நடிகை ரகுல் ப்ரீத் சிங், சார்மி, ராணா, ரவிதேஜா, நவ்தீப், இயக்குனர் பூரி ஜெகநாத் ஆகியோர் இவ்வழக்கில் சாட்சியாக மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இதில் இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகை சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தி முடித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் அமலாக்கத்துறையினர் துருவித் துருவி சுமார் 30 கேள்விகளை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டனாராம். மேலும், நாளை (செப்டம்பர் 6) மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடிகர் ராணா மற்றும் நடிகர் ரவிதேஜாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹைராபாத்தில் எப்.45 என்ற பெயரில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஜிம்மிற்கு போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாம்.
மேலும், எப்.கிளப் என்ற இடத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனராம். அங்கு கால்வின் போதைப்பொருள் சப்லை செய்தது வீடியோ ஆதாரத்துடன் சிக்கியது. இதன் அடிப்படையில்தான் அமலாக்கப்பிரிவினர் ரகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை நடத்தினார்களாம்.