ஈரமான மைதானத்தை உலர்த்த அயர்ன்பாக்ஸ் & ஹேர் டிரையர் – என்னா ஐடியா ?!!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடந்த முதல் டி 20 போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதுசம்மந்தமான புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, கவுகாத்தியில் இரு தினங்களுக்கு முன்பாக நடக்க  இருந்தது. ஆனால் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்னதாக மழைப் பெய்ய ஆரம்பித்ததால் தள்ளிக்கொண்டே போய் கடைசியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஈரமாக இருந்த மைதானத்தை உலரவைக்க ஆடுகள நிர்வாகிகள் அயர்ன்பாக்ஸ், ஹேர் டிரையர் மற்றும் சிறிய வேக்கம் க்ளீனர் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கேலி செய்யப்பட்டு வருகின்றன. உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கும் பிசிசிஐ மைதானத்தை உலர்த்த நவீனக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் இதுபோல ஆதிகால கருவிகளை பயன்படுத்துவதா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

Published by
adminram