விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இணைந்த டப்மாஷ் பிரபலம்!

விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு 'கோப்ரா’ என்ற டைட்டிலில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதுகுறித்து வெளியான மோஷன் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே

மேலும் இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கும் 'கோப்ரா’வுக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு இருப்பதாகவும் அதற்காகவே இந்த டைட்டிலை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் அஜய்ஞானமுத்து தெரிவித்திருந்தார். இவர் ஏற்கனவே டிமாண்டி காலனி, மற்றும் ‘இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ‘கேஜிஎப்’ நாயகி ஸ்ரீநிதிஷெட்டி நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது டப்மாஷ் மூலம் புகழ் பெற்றவரும் விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேற்றுகிரக பெண்ணாக நடித்தவருமான மிருணாளினி ரவி இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி இறுதியில் ரிலீஸ் ஆகும் என்றும் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த பாடல்கள் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் இயக்குனர் அஜய்ஞானமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Published by
adminram