">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நண்பா நீ வேற லெவல்…. விஜய்யின் வீடியோவை வெளியிட்டு நெகிழ்ந்த நண்பர்!
தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் தற்போது விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் தனது ட்விட்டரில் விஜய்யின் பாசிட்டிவ் வசனங்களின் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டு,
“நீ வேற லெவல் நண்பா. இந்த வீடியோவில் வெளிப்படுத்தியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைத் தாண்டி இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை பாசிட்டிவ்வாக உணர்ந்தேன். நாம் அனைவரும் எஸ்.பி.பி.க்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். விரைவில் கொரோனாவில் இருந்து உலகம் விடுபடட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
U are vera level”NANBA”Semma cute clip. Why I felt like posting,it’s not about cute expressions,saw it in friend’s status message, I personally felt so positive when I saw it. let us all pray today for SPB SIR kootu prathanai at 6 pm. Let the world be free from corona soon pic.twitter.com/3RGZOwvO9C
— actor sriman (@ActorSriman) August 20, 2020