ரசிகர்களை ஏமாற்றிய ‘டகால்டி’ - சந்தானத்துக்கு என்ன ஆச்சு?

by adminram |

3ff0f0eb0460f0814532c66457d08d95

ஹீரோவாக களம் இறங்கிய சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘டகால்டி’. இப்படத்தை விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒரு இடத்தில் ஒப்படத்தால் ரூ.10 கோடி கிடைக்கும் என்கிற வேலை சந்தானத்துக்கு வருகிறது. அவர் ஒப்படைத்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக்கதை.

இப்படத்தில் சந்தானத்துடன், யோகிபாபுவுடன் நடித்திருந்தார். எனவே, இது இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அழகான நடிகை ரித்திகா சென் ஆகியோர் நடித்திருந்ததால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் காலை முதலே எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

c870cb3daefc60c4464cea875c91d21d

குறிப்பாக சந்தானம் மற்றும் யோகிபாபு என இருவரும் இருந்தும் படத்தின் இறுதி 10 நிமிடம் தவிர படத்தின் எந்த இடத்தில் நகைச்சுவை இல்லை எனவும், பலவீனமான திரைக்கதையால் படம் தடுமாறுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, இப்படத்தில் காட்டப்படிருப்பது போல் மொக்கையான வில்லனை நீங்கள் எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.. படம் செம போர்.. மொக்கை பாஸ்.. காமெடியே இல்லை.. என அவர்கள் கூறி வருகின்றனர். எனவே ‘டகால்டி’ திரைப்படம் சந்தானத்தின் தோல்வி பட பட்டியலில் இணைந்துள்ளது.

cf7191be001c289278eed3c8d57166af

சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாகும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமாவது வெற்றிப்படமாக அமையட்டும் என வாழ்த்துவோம்..

Next Story