தர்பார் விவகாரம் ; ரஜினி மேலதான் தப்பு…. ஆர்.கே.செல்வமணி ஓப்பன் டாக்…

Published on: February 7, 2020
---Advertisement---

9a755b05491a11ac41dec0a94977e05b

லைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தின் வசூல் அத்தனை கோடி, இத்தனை கோடி என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டதில் ரூ.65 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக கூறி வினியோகஸ்தர்கள் சிலர் ரஜினியை சந்திக்க முயன்றனர். ஆனால், ரஜினி அவர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி ‘தயாரிப்பாளர்களிடம் இருந்துடான் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்குகிறனர். படம் வெற்றி பெற்றால் இயக்குனர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுப்பார்களா என்ன? வசூல் ஆகவில்லை என்றால் பணத்தை திருப்பி வாங்கிவிடலாம் என்கிற மனநிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.  

இதை ரஜினிதான் துவங்கி வைத்தார். அது அவர் செய்த தவறு. இனிமேலும், வினியோகதஸர்களின் இப்போக்கை அனுமதிக்க முடியாது. ஏ.ஆர்.முருகதாஸிற்கு இயக்குனர்கள் சங்கம் துணை நிற்கும்’ என தெரிவித்துள்ளார்.

பாபா படம் நஷ்டம் அடைந்த போது வினியோகஸ்தர்களுக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுத்து சரிகட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment