வாட்ஸ் ஆப்பில் பார்ட் பார்ட்டாக தர்பார் – அதிர்ச்சியடைந்த லைகா !

தர்பார் படத்தின் வீடியோக்கள் பார்ட் பார்ட்டாக வாட்ஸ் ஆப்பில் பரப்பப்பட்டு வருவதால் தயாரிப்பு நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு  நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் எதிர்பார்த்த வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் இணையதளங்களிலும் திருட்டுத் தனமாக வெளியானதால் மேலும் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகும். ஆனால் இம்முறை தர்பார் முழு படமும் துண்டு துண்டு வீடியோக்களாக வாட்ஸ் ஆப்பிலேயே வலம் வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து லைகா நிறுவனம் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனருக்குப் புகார் ஒன்றை அளித்துள்ளது.

Published by
adminram