மாஸ் காட்டிய தர்பார் –  முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதன் முறையாக முருகதாஸ்-ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் தர்பார் திரைப்படம் சென்னையில் மட்டும்  மொத்தம் 213 ஆயிரம் டிக்கெட் விற்பனை ஆனதாகவும் ரூ.2.27 கோடி வசூல் செய்துள்ளது. ரஜினி நடித்த 2.0 ரூ.2.64 கோடியும், பேட்ட ரூ. 2.37 கோடியும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிக வசூல் செய்த 3 இடங்களையும் ரஜினி படங்களே பெற்றுள்ளது. 

அதேபோல், தமிழகம் முழுவதும் ரூ.38 கோடியும்,  உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக இப்படம் ரூ.75-85 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Published by
adminram