தர்பார் சிறப்புக் காட்சி டிக்கெட் விற்பனை அமோகம் – வாயில் விரல்வைக்க வைக்கும் விலை !

தர்பார் படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சி டிக்கெட் விற்பனை நம்பமுடியாத அளவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரஜினி படத்தை முதல்நாள் பார்க்க ரசிகர்கள் வெறியோடு காத்திருக்க அந்த வெறியை காசாக்க முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் விலையை அனுமதிக்கப்பட்ட அளவை விட15 மடங்கு உயர்த்தி விற்க தியேட்டர்காரர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இதுபோல அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டு ரசிகர்கள் சுரண்டப்படுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.

Published by
adminram