தர்பார் ரூ.65 கோடி நஷ்டம்? – ரஜினி வீட்டுக்கதவை தட்டிய வினியோகஸ்தர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இப்படம் சில கோடிகளை வசூலித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரஜினியின் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், தர்பார் திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கு ரூ.65 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச ரஜினிகாந்தின் வீட்டிற்கு இன்று வினியோகஸ்தர்கள் சென்றுள்ளனர். ஆனால், நாளை வாருங்கள் பேசலாம் என ரஜினி தரப்பில் அவர்களை அனுப்பி வைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே பாபா, லிங்கா, குசேலன் உள்ளிட்ட சில படங்களுக்கு வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி நஷ்ட ஈடு கொடுத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram