டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம்-  ரிக்டர் அளவுகோலில் 6.1 !

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்றுமுன்னர் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி மற்றும் புற நகர் பகுதிகளிலும், ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆஃப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவானதாக சொல்லப்படுகிறது இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறியில் மின் விளக்குகள் ஆகியவை லேசாக அதிர்ந்த தாக தெரிகிறது. தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Published by
adminram