More

50 சதவீத அனுமதி ; கையை பிசையும் மாஸ்டர், ஈஸ்வரன் படக்குழு…திரையுலகம் கூறும் தீர்வு இதுதான்!..

பொங்கல் பண்டிகையை மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் குறி வைத்துள்ளது. மாஸ்டர் ஜனவரி 13ம் தேதியும், ஈஸ்வரன் 14ம் தேதியும் வெளியாகவுள்ளது. 100 சதவீதம் இருக்கை அனுமதி இருந்த நிலையில், 70 சதவீத தியேட்டர்களில் மாஸ்டரும், 30 சதவீத தியேட்டர்களில் ஈஸ்வரன் படமும் திரையிட திட்டமிடப்பட்டது. அதன்பின் ஒரு வாரம் கழித்து ரசிகர்களின் வரவேற்பை பொருத்து ஈஸ்வரனுக்கு தியேட்டரை அதிகரித்துக்கொள்ளலாம் என தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், 100 சதவீதம் அனுமதி ரத்து செய்யப்பட்டு, 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. எனவே, எப்படி தியேட்டர்களை பங்கிட்டுக்கொள்வது என இரு தயாரிப்பு நிறுவனங்களும் கையை பிசைந்து வருகிறது. ஏனெனில், 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில் இரு படங்களும் வெளியானால், நஷ்டம் ஏற்படவாய்ப்புண்டு. இதற்கு திரையுலகில் சில மூத்த வினியோகஸ்தர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 

அதன்படி, முதலில் மாஸ்டர் படத்தை திரையிடலாம். 2 வாரம் கழித்து ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்யலாம். இப்படி செய்தால் ஈஸ்வரன் வெளியாகும்போது திட்டமிட்டதை விட 2 மடங்கு அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்கலாம். தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும்  ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்தல் நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், பொங்கலை குறிவைத்து ஈஸ்வரன் படத்தை ஒரு மாதத்தில் முடித்தனர். சிம்புவும் ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக்கொடுத்தார். எனவே, ஈஸ்வரன் படக்குழு பொங்கல் ரிலீஸிலிருந்து பின் வாங்குமா என்பது சந்தேகமே.  50 சதவீதம் என அறிவித்தாலும் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என 2 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதை வைத்து பார்க்கும் போது ஈஸ்வரன் படம் ரிலீஸிலிருந்து பின் வாங்காது எனத்தெரிகிறது.

எனவே, தியேட்டர்களை எப்படி பங்கு போட்டு கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
 

Published by
adminram

Recent Posts