">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்தியன் 2 விபத்து எதிரொலி – பூனைக்கு மணி கட்டிய மாநாடு தயாரிப்பாளர்
சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ராட்சர கிரேன் சாய்ந்து 3 பேர் பலியாகினர். இது திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிசிஐடி போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்தை தொடர்ந்து திரைப்பட படப்பிடிப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. பெப்சி தொழிலாளர் சங்கமும் சமீபத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. தொழிலாளர்கள் மீது காப்பீடு செய்யாத படக்குழுவுடன் இணைந்து பணிபுரிய மாட்டோம் எனவும் பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்படப்பிடிப்பில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்துள்ளார். ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகை ஜிஎஸ்டி யுடன் ரூ.7.8 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து சுரேஷ் காமாட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுவரை எந்த தயாரிப்பாளரும் செய்யாத இந்த செயலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவங்கி வைத்து ‘பூனைக்கு மணி’ கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு படப்பிடிப்பில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்துள்ளார் அண்ணனும் தயாரிப்பாளரும் @sureshkamatchi . ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகை ஜிஎஸ்டி யுடன் ரூ.7.8 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது…
வாழ்த்துகள் அண்ணன் pic.twitter.com/4sye4PjeRt
— Prabhakaran Kamaraj (@wolfprabhakaran) February 25, 2020