மாவட்ட தலைநகர் ஆகும் முதல்வரின் ‘எடப்பாடி’. விரைவில் அறிவிப்பு

2f6a94ee4265b956953e5ab75d9eae05

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த ஊரான எடப்பாடி விரைவில் மாவட்டத் தலைநகராக மாற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் தற்போது 37 மாவட்டங்கள் இருந்து வரும் நிலையில் மேலும் மூன்று மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சேலம் மாவட்டத்தை பிரித்து எடப்பாடி என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கவும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சி என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கவும், தஞ்சை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது

முன்னதாக கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் என்றும், விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்றும், நெல்லை மாவட்டத்தை பிரிக்கப்பட்டு தென்காசி என்றும் புதிய மாவட்டங்கள் தோன்றின. அதேபோல் வேலூர் மாவட்டம் மூன்றாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என பிரிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story