எல்லோரும் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி

by adminram |

62f4b055212a6d7483a2e351d6455be4-1

தமிழகமெங்கும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் சொந்த தொகுதியான எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story