கோயம்புத்தூரில் நடந்த கோயில் திருவிழாவில் நகைகளை கொள்ளையடித்த மூன்று பெண்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் கோயம்புத்தூரில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழாவின் போது சில பெண்களிடம் இருந்து கிட்டதட்ட 35 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. அவர்கள் உக்கடம் போலிஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து நகைகளைத் திருடிய கேரளாவைச் சேர்ந்த இந்துமதி, கொழும்புவைச் சேர்ந்த பராசக்தி மற்றும் லண்டனைச் சேர்ந்த செல்வி ஆகியோரைக் கைது செய்து நகைகளை மீட்டனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெருங்கிய உறவினர்களான அவர்கள் இண்டெர்நெட் மூலம் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு சென்று இதுபோல திருட்டு வேலைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பராசக்தி, செல்வி ஆகியோரின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டு, மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…
ஐயப்பனை கொச்சைப்படுத்தும்…