More

ஈஸ்வரன் ஷுட்டிங் ஓவர்.. தீபாவளிக்கு டீசர்.. நம்ம சிம்புவா இது…

மாநாடு படம் கிடப்பில் கிடக்கும் நிலையில், குண்டான தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ள சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இது தொடர்பான போஸ்டர்கள் மற்றும் வீடியோ ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. தற்போது சிம்பு தனது புதிய புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தெறிக்கவிட்டார். 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், தீபாவளிக்கு டீசர் வீடியோ வெளியாகவுள்ளதாகவும் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனெனில், சிம்பு என்றாலே சரியாக படப்பிடிப்பிற்கு செல்ல மாட்டார் என அவருக்கு கெட்ட பெயர் உள்ளது. ஆனால், ஈஸ்வரன் படப்பிடிப்பில் ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் வேகமாக நடித்துக்கொடுத்து இதை சாத்தியமாக்கியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts