More

வதந்தியை நம்பி ஊமத்தங்காய் விதையை கரைத்து குடித்த 11 பேர் – மருத்துவமனையில் கவலைக்கிடம் !

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு 124 ஆக உள்ளது. தொற்று இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் ஊமத்தங்காய் விதையைத் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதை உண்மை என நம்பிய ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் தன் குடும்பத்தினர் 11 பேருக்கு ஊமத்தங்காய் விதையை அரைத்து தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த தண்ணீரை குடித்த அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Published by
adminram

Recent Posts