கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் வயிற்றில் காலி ஷாம்பூ பாக்கெட்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு சிறுமி தனது வயிறு கடுமையாக வலிப்பதாக பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அவர்கள் மருத்துவரிடம் காட்டி மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் வலி அடங்கவில்லை. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்குக் காரணம் அவரது வயிற்றில் எக்கசக்கமாக முடி மற்றும் காலி ஷாம்பூ பாக்கெட்கள் இருந்துள்ளன. அதன் பின் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெளியே எடுத்தனர்.
இதையடுத்து எப்படி அந்த பொருட்கள் சிறுமியின் வயிற்றுக்குள் சென்றது என அவரிடம் கேட்டபோது ’எனது தாய்மாமன் இறந்த விரக்தியில் அவற்றைத் தான் உண்டதாக சொல்லியுள்ளார்’. சிகிச்சைக்குப் பின் சிறுமி வலி இல்லாமல் நலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…