பெட் ரூமில் இப்படியா? புதுவிதமாக பிறந்த நாளை கொண்டாடிய ஏமி ஜாக்சன்

லண்டன் ரிட்டர்ன்: தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தன்னுடைய 17வது வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தார். மதராசப்பட்டினம் படத்தில் அழகு பதுமையாக நடித்திருப்பார். அந்தப் படத்தின் வெற்றி அவரை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து ஷங்கரின் ஐ, தாண்டவம், கெத்து, தங்கமகன் போன்ற படங்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தத்துடன் நின்ற திருமணம்: அதன் பிறகு 2.0 படத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த அத்தனை படங்களிலும் நல்ல கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருந்தார். அழகி போட்டியிலும் மிஸ் இங்கிலாந்து போட்டியிலும் கலந்து கொண்டு பரிசினை பெற்றார் எமி ஜாக்சன். இந்த நிலையில் எமி ஜாக்சனுக்கு பிரபல தொழிலதிபரான ஜார்ஜ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து எமிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
மீண்டும் கர்ப்பம்: திருமணம் செய்வதற்கு முன்பே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்தனர். அதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் தான் இவர்களுக்கு திருமணமும் நடந்தது. இப்போது மறுபடியும் எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய பிறந்த நாளை நேற்று தன் குடும்பத்துடன் கொண்டாடினார்.
பெட் ரூமில் புதுவிதமா?: அவருடைய பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார். பெட் ரூமில் எமி ஜாக்சன் , அவருடைய கணவர் மற்றும் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என ஆடையில்லாமல் வெறுமனே பெட் சீட்டை போர்த்திக் கொண்டு எமி உட்கார்ந்திருக்க அவருடைய கணவர் கேக்கை கொண்டு வந்து கொடுக்கிறார். மகனும் கணவரும் மாறி மாறி எமிக்கு முத்தம் கொடுத்து பிறந்த நாள் சர்ப்ரைஸ் செய்திருக்கின்றனர்.
குழந்தை பிறந்த பிறகும் எமி ஜாக்சன் படங்களில் நடித்து வந்தார். அருண்விஜய் நடித்த படத்திலும் நடித்திருந்தார். லண்டன் பெண்ணாக இருந்தாலும் எமி ஜாக்சனுக்கு என இங்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.