
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார்.
சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில், வேஷ்டி சட்டை அணிந்து, கையில் வாள் பிடித்து சூர்யா அதகளம் செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்த்து. மேலும், இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டது.

இந்நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வரும் அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா டெரர் லுக்கில் இருக்கும் அந்த போஸ்டர் அவரின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.






