சுகமில்லைன்னு சொல்லியும் விடாம டிஎம்எஸ்சை வற்புறுத்திப் பாட வைத்த இயக்குனர்... வச்சி செஞ்சிட்டாங்களே..!
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளியான 'பாலும் பழமும்' படததை இயக்கியவர் பீம்சிங். படத்தின் கதை பார்ப்பவர்களைக் கண் கலங்க வைத்து விடும். காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்து ஒன்றில் இறந்து விட்டாள் என்று நினைக்கிறார் ஹீரோ.
அவர் ஒரு புற்றுநோய் மருத்துவர். ஆனால் விருப்பமில்லாமல் 2வது திருமணம் செய்து கொள்கிறார். மனம் கொள்ளாத வாழ்க்கையில் விபத்து வேறு நேர்கிறது. அதில் கண் பார்வையை இழக்கிறார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க முதல் மனைவியே நர்ஸாக வருகிறார். தன் கணவர் 2ம் தாரத்துடன் விருப்பமே இல்லாமல் வாழ்வதை உணர்கிறாள்.
அவரை தன்பால் திசை திருப்ப அவரை வாக்கிங்கிற்கு அழைத்துச் செல்கிறார். அவர் மனம் மாற்றம் ஏற்பட வேண்டும் என பாடல் பாடுகிறாள். அதற்கு கணவரோ மறுப்பு தெரிவிக்கிறார். இப்படி ஒரு சூழலுக்குப் பாடல் உருவாகிறது.
அது தான் கண்ணதாசன் எழுதிய 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல். மறுநாள் ரெக்கார்டிங். எம்எஸ்.வி. குழுவினர், பி.சுசீலா எல்லாரும் ரெடி. ரிகர்சல் நடக்கிறது. ஆனால் டிஎம்எஸ். வரவில்லை. அவரிடம் இருந்து போன் வருகிறது. பீம்சிங் பேசுகிறார்.
அவருக்கு இரவுல இருந்து ஒரே ஜலதோஷமாம். அதனால ரெக்கார்டிங் கேன்சல் செய்யச் சொல்றாரு. இரண்டு நாள் கழிச்சி வச்சிக்கலாம்னு சொல்றாரு. அப்போது பீம்சிங் கேட்கிறார்.
'உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா, ஜூரம் ஏதும் இருக்கான்'னு. 'இல்ல வெறும் ஜலதோஷம் தான்'னு சொல்றாரு. 'அப்படின்னா உடனே புறப்பட்டு வாங்க. அப்படிப்பட்ட குரல் தான் இந்தப் பாட்டுக்குத் தேவை'ன்னு சொல்றாரு.
'ஹீரோ வாக்கிங் போகும்போது மழையில நனைஞ்சிடறாரு. அவருக்கும் ஜலதோஷம் தான். இந்தக் காட்சிக்கு உங்களோட ஜலதோஷக் குரல் தான் செட்டாகும்'னு சொல்றாரு. ஆனா 'இடையில தும்மிடாதீங்க. மூக்கை உறிஞ்சிடாதீங்க'ன்னு எம்.எஸ்.வி.. சொல்றாரு. நல்லவேளையா இந்த ரெண்டும் அவருக்கு வரல. ஆனா பாடல் முழுவதும் டி.எம்.எஸ்.சின் அந்த ஜலதோஷக்குரல் நன்றாகத் தெரிகிறது.