எல்லாரும் என்னை கட்டிப்பிடிங்க… தெருவில் நின்ற நடிகை.. வைரல் வீடியோ

2012ம் ஆண்டு வெளிவந்த Gangs of Waseypur படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வாங்கியர் ரிச்சா சதா.  தற்போது ஷகீலா, பங்கா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வருகிறார். மார்ட்டின் லூதர் கிங் நினைவாக ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் கட்டுப்பிடி வைத்தியம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

தற்போது அதை இந்தியாவிலும் ரிச்சா சதா அறிமுகம் செய்துள்ளார். என்னை கட்டிப்பிடிங்க என்கிற பலகையை ஏந்திய படி அவர் சாலையில் பல பெண்களும் சில ஆண்களும் அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி சென்றனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள் ரிச்சா ‘தற்போது பலரிடமும் வெறுப்பே காணப்படுகிறது. நான் சிலரை கட்டியணைத்தேன். அது மேஜிக். எல்லோரையும் கட்டி அணையுங்கள். அடுத்த வருடமும் இதை செய்வேன். எல்லோரிடமும் அன்பை பகிறுங்கள்’ என அவர் பகிர்ந்துள்ளார். 

இதையடுத்து பலரும் இவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Published by
adminram