எல்லாம் போச்சே!.. கை விட்டுப்போன தலைப்பு... ஷாக் ஆன வடிவேலு..

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்ப்டங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.. இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த 2 வருடங்களாக பேசி வருகிறார். ஆனால், இப்படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை. இதில், பிரச்சனை என்னவெனில், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ‘நாய் சேகர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவும் செய்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு போன் போட்ட வடிவேலு நாய் சேகர் தலைப்பை எனக்கு கொடுத்து விடுங்கள். நீங்கள் தலைப்பை மாற்றிக்கொள்ளுங்கள் என கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுக்க, உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம். இல்லையேல் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி என் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பை அறிவித்து விடுவேன் என மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நாய் சேகர் என்கிற தலைப்பில் சதீஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சதீஷின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது வடிவேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சுராஜ் - வடிவேலு இணையும் புதிய படத்திற்கு வேறு தலைப்பு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.