எல்லாம் இருக்கு… ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்… தர்பார் டிரெய்லர்  என்ன சொல்லுது?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டிரெய்லர் வீடியோவை நேற்று மாலை 6.50 மணியளவில் யுடியூபில் வெளியானது. இந்த வீடியோவை இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

டிரெய்லரை பார்க்கும் போது இது ஒரு அதிரடி போலீஸ் ஆச்ஷன் கதை என்பது புரிகிறது. மும்பை கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். ரஜினியை கொலைகாரன் என ஒரு போலீஸே கூறும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அதோடு, நான் ஒரு கெட்ட போலீஸ் என டிரெய்லரின் இறுதிகாட்சியில் ரஜினியே கூறுகிறார். எனவே, ஒரு வில்லன்.. ஒரு கமிஷனர் ஆகியோருக்கு இடையே நடக்கும் போர்தான் இப்படத்தின் ஒன்லைன் என்பது புரிகிறது. 

இந்த வீடியோ ரஜினியின் தீவிர ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், சாதாரண சினிமா ரசிகனுக்கு  ‘பேட்ட’ படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்படுத்திய பாதிப்பை கூட இந்த வீடியோ ஏற்படுத்தவில்லை என்றே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். டிரெய்லரின் ஒரு காட்சியில் கூட யோகிபாபு காட்டப்படவில்லை. எனவே, பெரிதாக காமெடி காட்சிகள் இல்லை என்பது தெரிகிறது. ரஜினியை மாஸாக காட்டியிருந்தாலும் ‘ஏதே ஒன்னு மிஸ்ஸிங்’ என டிரெய்லரை பார்த்த பலரும் கூறி வருகின்றனர்.

இன்னொன்று, இரு டான்.. ஒரு போலீஸ் அதிகாரி இருவருக்கும் இடையேயான மோதல் என்பது ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்தது என்பதால் ஒரு சலிப்பு வருகிறது. ஆனாலும், இயக்குனர் முருகதாஸ் என்பதால் திரைப்படத்தை முழுதாக பார்த்தால் மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.. 
காத்திருப்போம்…!

Published by
adminram