பிரபல நடிகை ஒருவர் இரவு நேர பார்ட்டியின்போது தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரது தங்கையும் கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவருமான சஞ்சனா கல்ராணி சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் அதே இரவு பார்ட்டியில் வந்தனா ஜெயின் என்ற தயாரிப்பாளர் கலந்துகொண்டிருந்தார். சஞ்சய் கல்ராணி மற்றும் வந்தனா ஜெயின் ஆகிய இருவருக்கும் முதலில் சின்ன சண்டை ஏற்பட்டு அதன் பின்னர் காரசாரமாக ஒருவர் ஒருவரை தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் சஞ்சனா கல்ராணி பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் வந்தனா ஜெயினை தாக்கியதாக தெரிகிறது
இதனை அடுத்து வந்தனா ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது தான் தயாரிப்பாளரிடம் சண்டை போட்டது உண்மைதான் என்றும் ஆனால் பீர் பாட்டிலால் தாக்கவில்லை என்றும் சஞ்சனா போலிசார்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் சஞ்சனா பீர் பாட்டிலால் யாரையும் தாக்கவில்லை என்று கூறினார்கள். இதனையடுத்து போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது
1960களில் தமிழ்நாட்டு…
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…