படப்பிடிப்பின் போது காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலமாக அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில் தான் தன்னை விட 10 வயது இளையவரான பாலிவுட் பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோன்சை காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். முன்னதாக ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். மேலும் தற்போது அமெரிக்க சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். சிட்டாடல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை ரூசோ சகோதரர்கள் இயக்குகிறார்கள். இந்த தொடரில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில் அவரது நெற்றி மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நெற்றியில் வெட்டு ஏற்பட்டு ரத்தம் சொட்டும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவிவருகிறது. பொதுவாக ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு டூப் நடிகர்கள் ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் ஒரு சில நடிகர்கள் அவற்றை தவிர்த்து தாங்களே ரிஸ்க் எடுத்து நடிப்பார்கள்.

அந்தவகையில் பல நடிகர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ரிஸ்க் எடுத்து வெற்றிகரமாக நடித்துள்ளார்கள். ஒரு சிலர் இதுபோன்று காயமடைந்தும் உள்ளனர். எதுவாக இருப்பினும் தங்கள் துறை சார்ந்த பணிகளில் இதுபோன்ற ரிஸ்க் எடுப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும். ஒருசிலர் நடிப்புக்காக தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து வருகிறார்கள். தற்போது பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.