More

அஜித் தயாரிப்பாளரிடம் அப்ளிகேஷன் போட்ட பிரபல இயக்குனர்.. என்ன சேதி தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஸ்டார் ஐகானின் முக்கியமானவர் நடிகர் அஜித். அவர் பெரிதாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் படம் வசூலில் சக்கை போடும். தொடர்ந்து, அவரும் விதவிதமாக கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், ஹீரோவா? வில்லனா? என தெரியாத லெவலில் அவர் நடித்து ஹிட் கொடுத்த படம் தான் மங்காத்தா.

இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.  தயாநிதி அழகிரி இப்படத்தை தயாரித்தார். இப்படம் அஜீத் குமாரின் 50வது படம்.

இந்நிலையில், அஜித்தின் 50வது பிறந்தநாளுக்கு மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதிக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.
 

Published by
adminram

Recent Posts