ஒரே நேரத்தில் 14 திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல தமிழ் நடிகர்!

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வருவதையே பெருமையாக கூறப்படுவது உண்டு. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி போன்றவர்கள் ஒரே நேரத்தில் ஆறு முதல் எட்டு படங்களில் நடித்து வந்த வரலாறும் உண்டு

இந்த நிலையில் நடிகர் யோகிபாபு ஒரே நேரத்தில் 14 திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் அவற்றில் ஐந்து திரைப்படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

ரஜினி, விஜய், அஜித் உள்பட மாஸ் நடிகர்கள் முதல் அறிமுக ஹீரோக்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் நடிக்கும் யோகிபாபு, மாஸ் நடிகர்கள் என்றும் பாராமல் அவர்களையும் கலாய்த்து நடித்து வருகிறார். சமீபத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினியையே பல காட்சிகளில் யோகிபாபு கலாய்த்து நடித்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

மேலும் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தாலும் எந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை என்றும், அந்த அளவிற்கு அவர் பக்காவாக பிளான் செய்து கால்ஷீட்டுக்களை கொடுத்து கொண்டிருப்பதாகவும் யோகி பாபுவை கோலிவுட் திரையுலகம் பாராட்டி வருகிறது

Published by
adminram