இந்தியன் 1 மைக்கேல் ஜாக்சன்!.. இந்தியன் 2 அதிதி ஷங்கர்!.. எல்லை மீறி கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

Published on: July 17, 2024
---Advertisement---

இந்தியன் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் முதல் நாளே படத்தின் ரிசல்ட்டை ரசிகர்கள் இணையத்தில் சொல்லிவிட்டனர். சனிக்கிழமையான இன்றும் இந்தியன் 2 டிசாஸ்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்தியன் படத்தைப் பார்த்து சேனாபதி கதாபாத்திரத்தின் மீது பயம் கொண்டிருந்த ரசிகர்கள் இந்தியன் 2 படத்தைப் பார்த்து அந்த பயம் எல்லாம் மறைந்து போய் அவரைக் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

சோசியல் மீடியா முழுவதும் இந்தியன் 2 மீம்ஸ் தான் கொட்டிக்கிடக்கின்றன. இந்தியன் 2 படத்தை ஷங்கர் முழுமையாக இயக்கவில்லை என்றும் புலி படத்தை இயக்கிய சிம்புதேவன் மற்றும் அரவான் படத்தை இயக்கிய வசந்தபாலனை வைத்தே சித்தார்த் மற்றும் சமுத்திரக்கனி போர்ஷனை எல்லாம் பாக்கியலட்சுமி சீரியல் போல எடுத்து தள்ளி விட்டார்கள் என்கின்றனர்.

கமல்ஹாசனின் காட்சிகள் மட்டும் ஷங்கர் பிரமாண்டமாக எடுத்தாலும் எடிட்டிங் செய்து ஓட்டும்போது படத்துடன் அந்த காட்சிகள் கொஞ்சம் கூட ஒட்டாமல் போனதுதான் இந்தியன் 2 படம் ஃபிளாப் ஆக காரணம் என்கின்றனர்.

இந்தியன் 2 படத்தில் பிரச்சினை இல்லை என்றும் இந்தியன் முதல் பாகத்தில் விமானம் பிளாஸ்ட்டாகும் போது சந்துரு கமலுடன் சேர்ந்து இந்தியன் தாத்தாவும் இறந்திருந்தால், இரண்டாம் பாகமே வந்திருக்காது, ஷங்கர் நம்மை இப்படி கொலை செய்திருக்க மாட்டார் என எல்லை மீறி கலாய்த்து வருகின்றனர்.

இந்தியன் முதல் பாகம் மைக்கேல் ஜாக்சன் பாடியது போல உள்ளது. இரண்டாம் பாகம் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் பாடியது போல இருக்கிறது என ஏகப்பட்ட மீம்களை போட்டு ஷங்கரை இந்தியன் 3 புரமோஷன் பக்கமே வந்துடாதீங்க என கலாய்த்து வருகின்றனர்.

ஹீரோக்களின் படங்கள் ஃபிளாப் ஆனால், முட்டுக் கொடுக்கும் ரசிகர்கள் இயக்குனர்கள் தோல்வியை சந்திக்கும் போது ஏன் அதை கடந்து செல்ல மறுக்கின்றனர் என்கிற கேள்வியை ஷங்கரின் விசுவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment