வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் – யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

வலிமை படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் செம்ம மாஸாக இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

அஜித்தின் வெற்றி படங்களான தீனா, பில்லா, ஆரம்பம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. அதனால் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். இப்போது அஜித் நடித்து வரும் வலிமை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அளித்த நேர்காணலில் வலிமை படம் பற்றி கேட்ட போது ‘வலிமை படத்தின் அஜித் நடித்துள்ள போலிஸ் காட்சிகள் மாஸாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram