’மாஃபியா படம் நல்லா இல்ல’ என சொன்ன ரசிகர் – பிரசன்னாவின் சூப்பர் பதில் !

சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ரசிகர் ஒருவரின் விமர்சனத்தை பிரசன்னா ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்தி நரேன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மாபியா திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் எதிர்மறை விமர்சனத்தைப் பெற்று வருகிறது. அதிகப்படியான் ஸ்லோமோஷன் காட்சிகள், கதையே இல்லாத திரைக்கதை ரசிகர்களை இந்த திரைப்படம் சலிப்படைய செய்துள்ளது.

இந்நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் டிவிட்டரில், நடிகர் பிரசன்னாவை டேக் செய்து ‘படம் நல்லா இல்ல’ என சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த ரசிகருக்கு பதிலளித்த பிரசன்னா ‘எல்லா திரைப்படங்களுக்கும் பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் இருப்பார்கள், நான் உங்கள் விமர்சனத்தை சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram