சொல்லி அடிச்ச தளபதி ரசிகர்கள்…யுடியூப்பில் சாதனை படைத்த  ‘குட்டிக்கதை’ பாடல்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் கடந்த 14ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் உருவான இப்பாடலை நடிகர் விஜயே பாடியிருந்தார். இப்படம் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

எனவே, யுடியூப்பில் இப்பாடல் அதிகப்படியான பார்வையாளர்களை பெற்று வருகிறது. தற்போது வரை ஏறக்குறைய 14 மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. மேலும், 1.2 மில்லியன் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியாகும் முன்பே இந்த வீடியோவை எப்படியாவது யுடியூபில் சாதனை படைக்க செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் சபதம் ஏற்றது  குறிப்பிடத்தக்கது.

Published by
adminram