More

பூக்களைப் பறித்து மாடுகளுக்கு வைக்கும் விவசாயிகள்! உறைய வைக்கும் காட்சி!

கொரோனா வைரஸ் பாதிப்பால உலகமே முடங்கியுள்ளது. இதனால் எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றைப் பரித்து எடுத்துச் செல்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு ஆகியப் பகுதிகளில் உள்ள பூ வியாபாரிகள் பூக்கள் பூத்து நிற்கும் நிலையில் அவற்றைப் பறித்து மாடுகளுக்கு தீவனமாக வைக்கின்றனர். கிலோ 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படும் சம்பங்கி பூக்களை வாங்க ஆள் இல்லாததால் பலரும் பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்து விடுகின்றனர்.

இதனால் நாள்தோறும் 100 டன்னுக்கு மேலாக சம்பங்கி பூக்கள் வீணாகிவருகிறதுவிவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Published by
adminram