இந்தியன் 2’ படக்குழுவினர்களுடன் இணைந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டீம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன்2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கமலஹாசன் இல்லாமலேயே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அறுவை சிகிச்சை செய்து முழு ஓய்வு எடுத்து வரும் கமல்ஹாசன் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான செட் எம்ஜிஆர் பிலிம் சிட்டி மற்றும் பின்னி மில்லில் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் தற்போது சண்டை பயிற்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த சண்டைப் பயிற்சியை ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் சண்டைக் காட்சியை இயக்கிய ஸ்டண்ட் கலைஞர்கள் இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஒரே ஒரு சண்டை காட்சிக்காகவே ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கமலஹாசன் படப்பிடிப்புக்கு வந்தவுடன் இந்த சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத்திசிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், விவேக், கிஷோர் ,வித்யுத் ஜம்வால், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Published by
adminram