விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் அப்பாவும் மகளும்

by adminram |

4da9f0b59cd4c984bd5b6df6f4a9ad3d

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இந்த படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ’ஹெனல்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக் படத்தை தான் கோகுல் இயக்க உள்ளார். இந்த படத்தில் அப்பா மகள் குறித்த உறவு மிக சிறப்பாக காண்பிக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பாக இரண்டாம் பாதியில் காணாமல் போன மகள் தேடும் அப்பாவின் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்தில் அப்பா-மகள் கேரக்டரில் உண்மையான அப்பா-மகள் ஆகிய அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்க உள்ளனர். கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே ‘தும்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை எளிமையாக இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story